படுக்கையறையில் மர்மநபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார்! சசிகலா புஷ்பாவின் 2வது கணவர் பரபரப்பு புகார்
சசிகலா புஷ்பா வீட்டு படுக்கை அறையில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார் என இரண்டாவது கணவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவில் முன்னர் எம்.பியாக இருந்தவர் சசிகலா புஷ்பா. பின்னர் பாஜகவில் இணைந்த அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.
சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் படுக்கை அறையில் மர்மநபர் இருந்தது குறித்து அவரின் 2வது கணவர் ராமசாமி காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து விசாரணை நடத்திய பொலிசார் சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர், அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தற்போது வீடியோ ஆதாரத்துடன் ஓன்லைன் மூலமாக சசிகலா புஷ்பா மீது ராமசாமி கொடுத்த புகாரின் முழுவிபரம்: மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராகிவிட்டு காரில் எனது மகளுடன் சென்னை வந்தேன். எனது வீட்டு கதவை அமுதா என்பவர் கதவைத் திறந்தார், வீட்டு படுக்கை அறையில் எங்கள் வீட்டிற்குள் உணவு பொட்டலங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன,மது வாடை வீசியது.
படுக்கை அறையில் எனது மனைவி சசிகலா புஷ்பா படுத்து இருந்தார். மற்றொரு அறையில் உள்ள படுக்கை அறையில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார். நான் அதிர்ச்சியாகி அந்த நபரை செல்போனில் வீடியோ எடுத்தேன்.
அந்த நபரும் அமுதா என்பவரும் என்னை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்தனர் என தெரிவித்திருந்தார்.