மனைவியை ஓட ஓட வெட்டிய கணவன் - அலறியடித்து ஓடிய பொதுமக்கள்
தமிழக மாவட்டம் திண்டுக்கல்லில் மனைவியை ஓட, ஓட வெட்டிய கணவனைப் பார்த்து பொதுமக்கள் அலறி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை ஓட, ஓட வெட்டிய கணவன்
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி பிரியதர்ஷினி. தம்பதி இருவருக்குள்ளும் அடிக்க சண்டை வருவதாக சொல்லப்படுகிறது.
மீண்டும் இவர்களுக்குள் சண்டை வந்தபோது, பிரியதர்சினி, மணியை தாக்கியுள்ளார். இதனையடுத்து இன்று காலை அவர் மருத்துவ சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அப்போது, திடீரென்று மருத்துவமனைக்கு வந்த மணி, பிரியதர்சினியைப் பார்த்ததும் அரிவாளால் தாக்க ஓடி வந்தார். இதைப் பார்த்ததும் பிரியதர்சினி உயிருக்கு பயந்து ஓட ஆரம்பித்தார்.
ஆனாலும், விடாமல் துரத்திச் சென்ற மணி ஓட ஓட விரட்டி அரிவாளால் சராமரியாக வெட்டிச் சாய்த்தார். இச்சம்பவத்தில் ரத்தம் சொட்ட சொட்ட பிரியதர்சினி கீழே மயங்கி விழுந்தார்.
கணவனை கைது செய்த பொலிசார்
இதைப் பார்த்ததும் நோயாளிகளும், மக்களும் பயந்து ஓடினர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட, ஊழியர்கள் பிரியதர்சினியை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தப்பி ஓடமுயன்ற மணியை அங்கிருந்தவர்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
மருத்துவமனையில் பிரியதர்சினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கால்களில் மட்டும் வெட்டுக்காயம் விழுந்ததால் அவர் உயிர் தப்பித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மணியை கைது செய்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |