மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து ஏரியில் வீசிய கணவர்
மனைவியை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்து பின்னர் ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
இந்திய மாநிலமான தெலங்கானவைச் சேர்ந்த தம்பதியினர் குருமூர்த்தி (45) மற்றும் வேங்கட மாதவி (35). இதில், குருமூர்த்தி முன்னாள் ராணுவ வீரராக இருந்து தற்போது ஹைதராபாத்தில் டிஆர்டிஓவில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஜனவரி 16-ம் திகதி அன்று வேங்கட மாதவி காணாமல் போனதால், இதற்கான விசாரணையை பொலிஸார் தீவிரப்படுத்தினர்.
பின்னர், இந்த விவகாரத்தில் கணவர் குருமூர்த்தி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தீவிர விசாரணையை பொலிஸார் மேற்கொண்டனர்.
அப்போது, குருமூர்த்தி அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொடுத்த வாக்குமூலத்தில், "நான் எனது மனைவியை கொலை செய்தேன். பின்னர், வீட்டின் கழிவறையில் வைத்து அவரது உடலலை துண்டு துண்டாக வெட்டினேன்.
அடுத்து, உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்து அவற்றை மீராபேட் ஏரியில் வீசினேன்” என்றார்.
இந்நிலையில், குருமூர்த்தி அளித்த தகவல்களுக்கு பொலிஸார் ஆதாரங்களை தேடி வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, இந்த தம்பதியினர் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள் என்று அக்கம்பக்கத்தினரும் உறுதி செய்துள்ளனர்.
இதில், குருமூர்த்தி அளித்த வாக்குமூலத்தின் படியே கொலை நடந்ததா என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |