நண்பருக்கு உதவ சென்ற கணவன்..மனைவி எடுத்த விபரீத முடிவு..சோகத்தில் குடும்பம்
புதுச்சேரியின் காரைக்காலில் கணவர் வீட்டை மறந்து தனது நண்பருக்கு உதவ சென்றதால், மனைவி விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நண்பருக்கு உதவி
காரைக்காலை அடுத்த நெடுங்காடு பருத்திக்குடியின் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சரவணன். கொத்தனாராக பணியாற்றி வரும் இவர், மனைவி துர்கா மற்றும் பிள்ளைகளை விடுத்து புதுச்சேரிக்கு சென்றுள்ளார்.
அங்கு மருத்துவமனையில் உடல்நல பாதிப்பினால் சிகிச்சை பெற்று வரும் தன் நண்பர் இராதாகிருஷ்ணனை உடன் இருந்து கவனித்து வந்துள்ளார்.
இவ்வாறாக அவர் 20 நாட்களாக தனது வீட்டிற்கு வரவில்லை. இதனால் மனைவி துர்கா மிகுந்த வேதனையில் இருந்துள்ளார்.
அத்துடன் வீட்டை மறந்து நண்பருக்கு உதவி வருவதால் கணவன் மீது கோபமும் அடைந்துள்ளார்.
iStock
எலி மருந்தை உட்கொண்ட மனைவி
இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்னர் சரவணன் வீடு திரும்பியுள்ளார். அப்போது மனைவி உடல்நலம் பாதித்திருப்பதை கண்டுள்ளார்.
அவரிடம் விசாரிக்க, துர்காவோ சரியாக சாப்பிடவில்லை என்று கூறியுள்ளார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார்.
அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது துர்கா எலி மருந்தை உட்கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Representational Photo
கணவர் தங்களை மறந்து 20 நாட்களாக வெளியூர் சென்றதால், கவலையில் இருந்த துர்கா இந்த முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், துர்காவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |