மனைவியின் Instagram Reels மோகம்.., மனமுடைந்த கணவர் எடுத்த விபரீத முடிவு
மனைவியின் இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் கணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் எடுத்த முடிவு
தமிழக மாநிலமான கர்நாடகா, சாமராஜ நகரில் உள்ள ஹனுருயின் என்ற பகுதியில் ஒருவரின் உடல் தூக்கில் தொங்கியபடி கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அந்த நபர் குறித்த தகவலை கண்டறிய விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் சாமராஜநகரைச் சேர்ந்த குமார்(34) என்பது தெரிய வந்தது. இவர், குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இவருடைய மனைவி ரீல்ஸ் உருவாக்குவதில் ஆர்வம் உடையவர். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.
ஆனாலும், குமாரின் மனைவி அதிலிருந்து வெளிவரவில்லை. இதனால், மனமுடைந்த குமார் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும், இது குறித்து குமாரின் சகோதரர் கூறுகையில், "குமாரின் மனைவி வேறு ஆண்களுடன் சேர்ந்து ரீல்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளார். இதனால் குமாரின் நண்பர்கள், அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த நிலையில் குமார் இருந்தார்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |