எனக்கு தெரியாமல் இப்படி பண்ணிட்டாளே! மனைவி சொன்ன ஒரு வார்த்தை... தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்
தமிழகத்தில் தனது பேச்சை கேட்காமல் லட்சக்கணக்கிலான பணத்தை எடுத்து ஆடம்பரமாக மனைவி செலவழித்து வந்ததால் வேதனையடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவொற்றியூர் கல்யாணி செட்டி நகரைச்சேர்ந்தவர் ஆனந்த் (35). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
ரம்யா, தனது கணவர் ஆனந்துக்கு தெரியாமலேயே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்தை ஓன்லைன் மூலம் எடுத்து அதனை ஆடம்பரமாக செலவு செய்ததாக தெரிகிறது.
இதற்கிடையில் திடீரென தனது வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் குறையவே அதிர்ச்சி அடைந்த ஆனந்த், இதுபற்றி மனைவியிடம் ஏன் இப்படி செய்கிற்றாய், பணம் எல்லாம் எங்கே என கேட்டார்.
அதற்கு ரம்யா, குடும்ப செலவுக்காக செலவு செய்ததாக சாக்குபோக்கு கூறினார்.
தனக்கு தெரியாமல் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மனைவி தேவையின்றி ஆடம்பரமாக செலவு செய்துவிட்டு குடும்பத்துக்கு செலவழித்தேன் என கூறிய வார்த்தை ஆனந்த் மனதை பாதித்தது.
இதனால் மனமுடைந்த ஆனந்த், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.