மனைவி இறந்த அடுத்த நாளே தூக்கத்தில் உயிரிழந்த கணவர்
மனைவி இறந்த அடுத்த நாளே தூக்கத்தில் கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
67 வருட திருமண பந்தம்
தமிழக மாவட்டமான மதுரை, கருப்பாயூரணியைச் சேர்ந்த தம்பதியினர் வீராயி (80) மற்றும் முத்து அம்பலம் (85).
இதில், மூதாட்டியான வீராயி தனது வயது மூப்பின் காரணமாக கடந்த 8-ம் திகதி நள்ளிரவில் தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் அவருடைய கணவர், 67 வருட திருமண பந்தத்தில் வாழ்ந்து வந்த மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், மனைவி இறந்த அடுத்த நாளே கணவர் முத்து அம்பலமும் 9-ம் திகதி இரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
இத்தனை நாட்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இருவரும் அடுத்தடுத்த நாளே உயிரிழந்திருப்பது அவர்கள் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |