ஓடும் ட்ராமில் பெண் மீது தீவைக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய திருப்பம்: குற்றவாளி யார் தெரியுமா?
ஜேர்மனியில், ஓடும் ட்ராமில் ஒருவர் ஒரு பெண் மீது எரிபொருள் ஒன்றை ஊற்றி தீவைத்த சம்பவத்தில் முக்கிய திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஓடும் ட்ராமில் பயங்கரம்...
ஜேர்மனியின் Thuringia மாகாணத்திலுள்ள Gera நகரில், ஞாயிற்றுக்கிழமை, ஓடும் ட்ராமில் ஒரு பெண் மீது திரவம் ஒன்றை ஊற்றி தீவைத்தார் ஒருவர்.
உடனடியாக மக்கள் ட்ராமை நிறுத்தும் அவசர பொத்தானை அழுத்த, அதைப் பயன்படுத்திக்கொண்டு ட்ராமிலிருந்து இறங்கி தப்பியோடிவிட்டார் அந்த நபர்.
ட்ராமின் சாரதி விரைவாக அந்தப் பெண் மீது பற்றிய தீயை அணைக்க, ஹெலிகொப்டர் மூலம் அந்த 46 வயதுப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
குற்றவாளி யார் தெரியுமா?
இந்நிலையில், வழக்கில் முக்கிய திருப்பமாக, 46 வயது நபர் ஒருவர் தாமாக முன்வந்து பொலிசில் சரணடைந்துள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை, அந்தப் பெண்ணின் கணவரேதான்!
பொலிசார் இந்த வழக்கை கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |