மனைவியை காருடன் தீ வைத்து கொன்ற கணவர்.., கேரளாவில் பயங்கரம்
கணவர் ஒருவர் தனது மனைவியை காருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவரின் கொடூர செயல்
இந்திய மாநிலமான கேரளா, கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் பத்மராஜன் மற்றும் அனிலா (44). இதில், அனிலா நேற்று தனது ஆண் நண்பர் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரது கணவர் பத்மராஜன் மனைவி சென்ற காரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதையடுத்து, செம்மாமுக்கு என்ற பகுதிக்கு அருகே கார் சென்றுகொண்டிருந்த போது காரை இடைமறித்து தடுத்து நிறுத்தியுள்ளார்.
பின்னர், தன்னிடம் இருந்த பெட்ரோலை காரின் மீது ஊற்றை கொளுத்தியுள்ளார். இதில், காருக்குள் இருந்த அனிலா மற்றும் அவரது ஆண் நண்பருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
பின்னர், அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே அனிலா உயிரிழந்து விட்டார். அவருடைய ஆண் நண்பர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தீ வைத்து எரித்த பத்மராஜனை கொல்லம் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |