இரும்பு ராடால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! விசாரணையில் கூறிய அதிர்ச்சி காரணம்
தமிழக மாவட்டம் திருவள்ளூர் அருகே இரவு உணவு கொடுக்காததால் மனைவியை கணவனே இரும்பு ராடால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட கணவன்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மடிமை கண்டிகையைச் சேர்ந்தவர் ரவி (65). இவரது மனைவி ஜோதி. செவித்திறன் மற்றும் பேச்சுத்திறனற்ற மாற்றுத்திறனாளியான ரவி, கடந்த ஐந்து ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரவி மற்றும் அவரது மனைவி ஜோதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அடித்துக் கொலை
அப்போது ஜோதி கணவர் ரவி யை ஆத்திரத்தில் தாக்கியுள்ளார். அதன் பின்னர் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை ஜோதியை அவர் இரும்பு ராடால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில் ஜோதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரவியை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மனைவி தன்னை தாக்கியதாலும், இரவு உணவு வழங்க மறுத்து தூங்கச் சென்றதாலும் ரவி அவரை கொலை செய்துள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.