மனைவியை கதற கதற கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்! நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில், கணவர் வேறு ஒரு பெண்ணுடன் பேசுவதை தட்டி கேட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி செல்வி(45). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆனந்தகுமார் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை குடிபோதையில் இருந்த ஆனந்தகுமார் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தனது கணவர் வேறு ஒரு பெண்ணிடம் பேசுவது செல்விக்கு தெரிய வந்துள்ளதால் அந்த பெண்ணை பற்றி கணவருடன் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தகுமார் கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
 இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ஆனந்தகுமார் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        