மொபைலில் பேசிக்கொண்டிருந்த மனைவி: சந்தேகத்தில் கணவன் செய்த பயங்கர செயல்
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், மனைவி மொபைலில் பேசிக்கொண்டிருந்ததால் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட சண்டை, கொலையில் முடிந்துள்ளது.
கணவன் செய்த பயங்கர செயல்
ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராம் நகரைச் சேர்ந்தவர் நரேந்திர சிங். நரேந்திர சிங்கின் மனைவி காஜல் தேவி (36).
இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில், காஜல் இரவு 8.00 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவாராம். சிங் நள்ளிரவு வாக்கில்தான் வருவாராம்.

புதன்கிழமை அப்படி நள்ளிரவு சிங் வீட்டுக்கு வரும்போது, காஜல் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
இந்த நேரத்தில் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய் என கேட்ட சிங் மனைவியிடம் மொபைலைக் கேட்க, காஜல் கொடுக்க மறுத்திருக்கிறார்.
இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்ற, ஆத்திரத்தில் துப்பாட்டாவால் மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார் சிங்.
மனைவியைக் கொன்றுவிட்டு சிங் தலைமறைவாகிவிட்ட நிலையில், பொலிசார் அவரை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |