அமெரிக்காவின் துணை அதிபராகும் இந்திய வம்சாவளி பெண்ணின் கணவர்.., பின்னணி என்ன?
அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்கவுள்ள ஜேடி வான்ஸ் இந்திய வம்சாவளி பெண்ணின் கணவர் ஆவார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இதில், டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பே ஜேடி வான்ஸ் தான், துணை அதிபர் என்பதை ட்ரம்ப் முடிவு செய்து விட்டார். தற்போது, ட்ரம்ப் அதனை உறுதி செய்தார்.
பின்னணி என்ன?
சட்டப்படிப்பு படித்து, செனட்டராக பணியாற்றி வரும் ஜேடி வான்ஸ் ஒரு பத்திரிக்கையாளர் ஆவார். இவரது மனைவி உஷா சிலுக்கூரி ஒரு இந்தியர்.
இந்திய மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்தவர் உஷா சிலுக்கூரி. இவர், பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் தான்.
ஆனால், இவருடைய மூதாதையர்கள் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டம், உய்யூரு மண்டலம், சாய்புரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
உஷா சிலுக்கூரியின் பெற்றோர்களான ராதா கிருஷ்ணா மற்றும் லட்சுமி ஆகியோர் கடந்த 1980 -ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு சென்றனர்.
இதில், தாய் லட்சுமி அமெரிக்காவில் மூலக்கூறு உயிரியல், உயிர் வேதியியல் துறை நிபுணராக உள்ளார் மற்றும் தந்தை ராதா கிருஷ்ணா ஏரோ ஸ்பேஸ் பொறியாளராக பணியாற்றியவர் ஆவார்.
கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டியாகோவில் பிறந்த உஷா சிலுக்கூரி ஏல் பல்கலை கழகத்தில் வரலாறு படிப்பில் பட்டம் பெற்றார். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார்.
முதன் முதலாக ஜேடி வான்ஸை ஏல் சட்டப்படிப்பு கல்லூரியில் தான் உஷா சிலுக்கூரி சந்தித்துள்ளார். பின்னர், நட்பு ஏற்பட்டு காதலாக மாறி 2014 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடந்தது. இவர்களுக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். கணவரின் வெற்றிக்கு பின்னால் உஷா சிலுக்கூரியின் கடின உழைப்பும் அடங்கியது என்பது முக்கியமானது ஆகும். அவரின் அரசியலுக்கு பெரும் உறுதுணையாக இருந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |