பெண்குழந்தை பிறந்ததால் மனைவியை உயிருடன் எரித்த கணவன்.., தீயோடு தெருவில் ஓடிய மனைவி
மகாராஷ்டிராவில் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பிரசவித்த மனைவியை கணவன் உயிருடன் தீவைத்து எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மூன்றாவதாக பிறந்த பெண்குழந்தை
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் கங்காகேட் நாகாவை சேர்ந்தவர் குண்ட்லிக் உத்தம் காலே(32).
இவரது மனைவி மைனா குண்ட்லிக். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் இல்லாததால் மைனாவை காலே தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான மைனாவுக்கு சமீபத்தில் பிரசவம் நடந்துள்ளது. மூன்றாவது முறையும் பெண் குழந்தையே பிறந்துள்ளது.
தீ வைத்து எரித்த கணவன்
ஆத்திரமடைந்த கணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடந்த வியாழக்கிழமை இரவு மைனா மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்துள்ளார்.
உயிருடன் எரிந்தபடி மனைவி அலறியடித்துக்கொண்டு வீட்டின் வெளியே ஓடினார்.
அக்கம்பக்கத்தினர் தீயை அனைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், மைனாவின் சகோதரி அளித்த புகாரின் பேரில் பொலிஸார் கணவன் குண்ட்லிக் உத்தம் காலேவை கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |