கணவரின் பிறப்புறுப்பை அறுத்தெடுத்த இரண்டாவது மனைவி... நடந்தது என்ன?
முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்து ரசித்ததால் ஆத்திரம் அடைந்த இரண்டாவது மனைவி எடுத்த அதிரடி முடிவு அந்த பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் என்டிஆர் மாவட்ட முப்பலா கிராமத்தில் வசித்து வரும் கோட்டா ஆனந்த்பாபு என்றவருக்கே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டாவதாக வீரம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார் ஆனந்த்பாபு.
இந்நிலையில் நேற்று மாலை அவரது முதல் மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்து ரசித்துள்ளார்.
இதை பார்த்த வீரம்மா கோபமடைந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த வீரம்மா கணவரின் பிறப்புறுப்பை அறுத்துள்ளார்.
இதனால் வலியில் ஆனந்த்பாபு துடித்துக்கொண்டே கத்தியுள்ளார். இவரின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |