மனைவி இறந்ததற்காக கண்ணீர் விட்டு கதறிய கணவன்... நாடே கலங்கிய தருணம்: பின்னர் தெரியவந்த திடுக் உண்மை
தன் மனைவி இறந்ததற்காக வெளிப்படையாக கண்ணீர் விட்டுக் கதறிய பிரான்ஸ் நாட்டவர் ஒருவரைக் கண்டு நாடே கலங்கியது.
ஆனால், பின்னர் தெரியவந்த ஒரு உண்மை, மக்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
தகவல் தொடர்பு துறையில் பணியாற்றிவந்த Jonathann Daval (36), ஒரு நாள் ஜாகிங் சென்ற தன் மனைவி Alexia (29)ஐக் காணவில்லை என பொலிசில் புகாரளித்தார்.
மோப்ப நாய்கள், ஹெலிகொப்டர்கள் உதவியுடன் களமிறங்கிய பொலிசார், இரண்டு நாட்களுக்குப் பின் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் எரிந்த நிலையில் Alexiaவின் உடலைக் கண்டுபிடித்தார்கள்.
மனைவியின் மரணச் செய்தி கேட்டு Jonathann கண்ணீர் விட்டுக் கதறியதை தொலைக்காட்சியில் கண்ட நாடே கலங்கியது.
அவர் வாழ்ந்த Gray-la-ville பகுதி மக்கள் அனைவரும் Alexiaவின் இறுதிச் சடங்கின்போது Jonathannக்கு ஆறுதலாக அவருடன் நடந்து சென்றார்கள்.
ஆனால், பொலிசாரின் கண்கள், Jonathannஇன் கைகளில் இருந்த காயங்களைக் கவனித்துள்ளன. நகத்தால் கீறிய மட்டும் கடிபட்ட காயங்களைக் கண்ட பொலிசார் அவை என்ன என கேட்க, தங்கள் இருவருக்கும் சண்டை நடந்ததாக தெரிவித்துள்ளார் Jonathann.
Alexia காணாமல் போனதாக Jonathann கூறிய நாளன்று, தான் எங்கும் செல்லவில்லை என அவர் கூற, அக்கம் பக்கத்தவர்களோ, கார் புறப்பட்ட சத்தத்தை தாங்கள் கேட்டதாக தெரிவித்தார்கள்.
அத்துடன் Alexiaவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் இருந்த கார் சக்கரங்களின் தடங்கள் Jonathannஉடைய கார் தடங்களுடன் ஒத்துப்போயிருக்கின்றன. பொலிசார் தீவிரமாக Jonathannஐ விசாரிக்க ஆரம்பிக்க, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு புதுக்கதை சொல்லியிருக்கிறார் அவர்.
கடைசியாக உண்மை வெளிவந்திருக்கிறது. Jonathannம் Alexiaவும் பதின்ம வயதிலேயே சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். Jonathannக்கு தாம்பத்ய வாழ்க்கையில் மனைவியை திருப்திப்படுத்த இயலாத ஒரு குறைபாடு இருந்துள்ளது.
தாம்பத்ய வாழ்க்கையில் சலித்துப்போன Alexia, கணவனை பிரிய முடிவு செய்திருக்கிறார். அதைத் தெரிந்துகொண்ட Jonathann, Alexiaவின் தலையை சுவரில் பலமுறை மோதி, பின் அவரது கழுத்தை நெறித்துக்கொன்றுவிட்டு, அவரது உடலை காரில் எடுத்துச் சென்று மரங்கள் அடர்ந்த பகுதியில் போட்டு எரித்திருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒருவனுக்காக வருந்தினோமே என கடுப்பில் இருக்கிறார்கள் மக்கள். Jonathannக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் Alexiaவின் பெற்றோரைப் பார்த்து சாரி, சாரி என்றானாம் Jonathann, ஆனால் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லையாம்.