மனைவி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை... ஆட்டிசம் பாதித்த மகள் உட்பட இரு கொலைகள் செய்த பிரித்தானியர்
குடும்பத்தைவிட்டு மகளுடன் பிரிந்து செல்வதாக கூறிய பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன், ஆட்டிசம் பாதித்த தமது மகளையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது.
மகளையும் மனைவியையும்
பிரித்தானியாவில் Great Waldingfield பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிலேயே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 47 வயதான பீற்றர் நாஷ் என்பவர் தமது மகளையும் மனைவியையும் கொலை செய்துள்ளார்.
Credit: East Anglia News Service
இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் தாமே வாதாடிய பீற்றர் நாஷ், 43 வயதான தமது மனைவி ஜில்லு நாஷ் மற்றும் மகள் லூயிஸ் ஆகியோரை கொலை செய்யவில்லை என மறுத்துள்ளார்.
2022 துவக்கத்தில் ஜில்லு நாஷ் தம்முடன் பணியாற்றும் ஒருவருடன் நெருக்கமாக பழகத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் தமது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, தனியாக குடியிருப்பு ஒன்றையும் அமைக்க திட்டமிட்டுள்ளார்.
நாஷ் தம்பதியின் திருமண பந்தம் மகிழ்ச்சியானதாக இல்லை என்றே நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. 2009ல் திருமணம் முடிந்த பின்னர் இருவரும் மனக்கசப்புடனே இருந்துள்ளனர். அத்துடன் 2020ல் பீற்றர் நாஷ் தமது வேலையை இழக்கும் நிலையும் ஏற்பட்டது.
மட்டுமின்றி, ஆட்டிசம் பாதித்த தமது மகளை முழு நேரமும் கவனிக்கும் பொறுப்பும் பீற்றர் வசம் வந்துள்ளது. மேலும், தமது மனைவி தம்மை ஏமாற்றுவதாக நாஷ் தெரிந்து வைத்திருந்தார் எனவும் விசாரணையில் தெரியவந்தது.
காதலனுடன் ஊர் சுற்றும் மனைவி
அத்துடன் தமது மனைவியும் அவரது காதலனும் ஒன்றாக ஊர் சுற்றுவதை பீற்றர் நாஷ் கண்ணால் பார்த்துள்ளார். இப்படியான சூழலிலேயே பீற்றர் நாஷ் தமது மனைவியை கழுத்தை நெரித்தும் மகள் லூயிசை கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார்.
Credit: East Anglia News Service
இந்த நிலையில் செப்டம்பர் 8ம் திகதி ஜில்லு நாஷ் பணிக்கும் திரும்பாமலும், லூயிஸ் பள்ளிக்கு செல்லாத நிலையில், பொலிசார் அவர்களின் குடியிருப்புக்கு விசாரிக்க சென்றுள்ளனர்.
பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்ற பொலிசாரை சமையல் எரிவாயு கசிவு தடுத்து நிறுத்தியுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு குழுவினரை அழைத்து உரிய பாதுகாப்பை உறுதி செய்த பின்னர், பொலிசார் ஜில்லு மற்றும் லூயிசின் சடலங்களை மீட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், தமது மனைவி மீதான கோபத்தால் கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என பீற்றர் நாஷ் தெரிவித்துள்ளார்.