மாதம் ரூ.2.2 கோடி வருவாய்... இளம் தம்பதியின் கனவுத் திட்டத்திற்கு ஊக்கமளித்த டாடா: நிறுவனத்தின் மதிப்பு
வாடிக்கையாளர்களின் வீட்டுகே உணவு விநியோகம் செய்யும் Swiggy மற்றும் Zomato போன்று, விசித்திரமான திட்டமொன்றை செயல்படுத்தி, தற்போது மாதம் ரூ.2.2 கோடி வரையில் வருவாய் ஈட்டி வருகிறது ஒரு தம்பதி.
பெட்ரோல் விநியோகம்
அதிதி மற்றும் சேத்தன் தம்பதியின் கனவுத் திட்டமான Repos Energy என்ற நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பெட்ரோல் விநியோகம் செய்து வருகிறது.
இவர்களது செயலியில் தேவையை பதிவு செய்தால், வீட்டிற்கே பெட்ரோலை விநியோகம் செய்கின்றனர். புனேவைச் சேர்ந்த நிறுவனத்தில் Swiggy மற்றும் Zomato போன்று பணம் செலுத்தி பெட்ரோல் வாங்கலாம்.
தற்போது இந்தியாவின் 65 நகரங்களில் இவர்களது நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் மாதம் 70,000 வரையே வருவாய் ஈட்டி வந்துள்ளது Repos Energy நிறுவனம். ஆனால் இவர்களின் திட்டம் மற்றும் செயல்பாடுகள் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவை ஈர்க்க, அவர் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கினார்.
ரூ.65 கோடிக்கு மேல் வர்த்தகம்
அதன் பின்னர், Repos Energy நிறுவனம் பெரும் வளர்ச்சியை எட்டியது. அதுவரை மாதம் ரூ.70,000 வருவாய் ஈட்டி வந்துள்ள நிலையில், மாதம் 2.2 கோடி வருவாய் என்ற நிலைக்கு உயர்ந்தது.
அது மட்டுமின்றி, கடந்த நிதியாண்டில் ரூ.65 கோடிக்கு மேல் வர்த்தகம் கண்டுள்ளது Repos Energy நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.200 கோடி என்றே கூறப்படுகிறது.
ரத்தன் டாடா முதலீடு செய்வதை அறிந்த பின்னர், Larsen & Toubro, Tata Group, Mahindra & Mahindra, Schindler, JW Marriott hotel, Phoenix Mall, The Westin Hotel மற்றும் General Electrical ஆகிய நிறுவனங்கள் இவர்களின் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |