திருமணமாகி ஒரே வருடத்தில் கணவன், மனைவி விபரீத முடிவு
தமிழக மாவட்டம் புதுக்கோட்டையில், குடிப்பழக்கத்தினால் ஏற்பட்ட பிரச்சனையால் திருமணமாகி ஒரே வருடத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குடிப்பழக்கத்திற்கு அடிமை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளம் நிம்புநேஸ்வரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பொற்பனையான். கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா. இவர்கள் இருவருக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், பொற்பனையான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் பிரியங்காவுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டு வந்தது.
அதுமட்டுமல்லாமல், பிரியங்காவின் நகைகளை அடகு வைத்தும் அவர் குடித்து வந்துள்ளார்.
கணவன் - மனைவி தற்கொலை
இதனால், மனமுடைந்த பிரியங்கா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், மனைவியின் தற்கொலையை அறிந்த பொற்பனையான் அதிர்ச்சியால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த ஆலங்குடி பொலிசார் உடனடியாக விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிப்பழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |