இந்தியாவின் மிகப்பெரிய பலம் தான் அவர்களின் மிகப்பெரிய பிரச்சனை! நாசர் ஹுசைன் கருத்து
இந்தியா போன்ற மிகவும் திறமையான அணி டி20 உலகக் கோப்பையில் பின்னடைவை சந்திதததற்கான காரணத்தை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் அடையாளம் கண்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து கோலி தலைமையிலான இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.
கடந்த 8 ஆண்டுகளில் முதன் முறையாக ஐசிசி போட்டிகளில் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
இந்திய அணியின் தடுமாற்றத்திற்கான காரணங்களை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பட்டியலிட்டுள்ளார்.
இந்திய அணியின் பெரிய பலங்களில் ஒன்று தான் அவர்களின் பெரிய பிரச்சினைகளில் ஒன்று.
இந்திய அணியில் நிறைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அதுதான் ஐசிசி போட்டிகளில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளும் ஒரே விஷயம்.
அவர்கள் பயமின்றி விளையாடுவதில்லை. ஏனென்றால் அவர்கள் மிகவும் திறமையானவர்கள்.
நான் இந்தியாவை மிகவும் திறமையான அணியாக பார்க்கிறேன். ஆனால், சில நேரங்களில் வீரர்களை தேர்வு செய்வதில், குறிப்பாக ஹர்திக் பாண்டியா வெறும பேட்ஸ்மேனாக விளையாடுவது அணியின் சமநிலையை மாற்றுகிறது.
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன்களான ரோகித்தையும் ராகுலையும் பிரித்தது நல்லதல்ல என்று ஹுசைன் சுட்டிக்காட்டினார்.