ஐயப்பனுக்கு மாலை அணிந்த தொகுப்பாளினி மணிமேகலையின் கணவர் ஹுசைன்
பிரபல தொகுப்பாளினி மணிமேகலை சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வருபவர்.
எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவியான இவர் காலேஜில் படித்துக் கொண்டே பகுதி நேரத்தில் தொகுப்பாளாராக வேலை செய்து வந்தார்.
மணிமேலை, துணை நடன இயக்குனர் ஹுசைனை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சன் மியூசிக்கில் இருந்து விலகியவர் விஜய் டிவியில் மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன் பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி, அதன் பின் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதுத்தவிர தனது கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இந்நிலையில், மணிமேகலையின் கணவர் ஹுசைன் ஒரு முஸ்லீம், இவர் தற்போது ஐயப்பன் சாமி கோவிலுக்கு மாலை அணிந்திருக்கிறார்.
இதைப் பற்றி மணிமேகலை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஹுசைனின் இந்தச் செயலுக்கு இணையத்தில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |