ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியிடம் உதைபட்ட ஹைதராபாத்! தமிழன் நடராஜன் இல்லாததால் தோல்வியா? பயிற்சியாளர் கருத்து
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் சார்பில் தமிழக வீரர் நடராஜன் விளையாடியிருந்தாலும் போட்டி முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்காது என கருதுவதாக பயிற்சியாளர் கூறியுள்ளார்.
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டி ஹைதராபாத் - டெல்லி அணிகள் மோதிய நிலையில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் போட்டி குறித்து பேசிய ஹைதராபாத் அணி பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ், நடராஜன் விளையாடியிருந்தால் ஆட்டத்தின் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நான் கருதவில்லை.
நடராஜன் விளையாடாததால் சிறிது வருத்தம் ஏற்பட்டது. டெல்லி அணியினர் மிக சிறப்பாக விளையாடினார்கள் என கூறியுள்ளார்.