வெளிநாட்டில் இந்திய மாணவருக்கு ஏற்பட்ட கொடூரம்... நால்வர் குழுவால் பயங்கரம்

Hyderabad Crime Indian Origin
By Arbin Feb 07, 2024 05:30 AM GMT
Report

ஐதராபாத் பகுதி மாணவர் ஒருவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில், குடியிருப்பின் அருகாமையிலேயே நால்வர் குழுவால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய வம்சாவளி மாணவர்கள் நால்வர்

தமது நிலை குறித்து காணொளி ஒன்றில் கோரிக்கை வைத்த அந்த மாணவர், கொடூரமாக தாக்கப்பட்டதையும் அலைபேசியை பறித்திக்கொண்டு அந்த குழு மாயமானதையும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இந்திய மாணவருக்கு ஏற்பட்ட கொடூரம்... நால்வர் குழுவால் பயங்கரம் | Hyderabad Student Attacked Four Men Chicago

ஆண்டு பிறந்து ஒரே மாதத்தில் இந்திய வம்சாவளி மாணவர்கள் நால்வர் அமெரிக்காவில் இதுவரை கொல்லப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்திய மாணவர் ஒருவர் நால்வர் குழுவால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் நகரை சேர்ந்த Syed Mazahir Ali என்பவர் அமெரிக்காவில் Indiana Wesleyan பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், அவரது குடியிருப்பின் அருகாமையில் செவ்வாய்க்கிழமை அவர் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலை, மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் சொட்ட, Syed Mazahir Ali தெரிவிக்கையில், உணவு பொட்டலத்துடன் குடியிருப்புக்கு திரும்பும் நிலையில், நால்வர் குழு ஒன்று தம்மை எதிர்கொண்டு, தாக்கியதாகவும்,

நால்வர் குழு ஒன்று

உயிர் பயத்தில் ஓட்டமெடுத்த தம்மை துரத்தி துரத்தி தாக்கியதாகவும், அதன் பின்னர் தம்மிடம் இருந்த அலைபேசியை பறித்துக் கொண்டு அந்த குழு மாயமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இந்திய மாணவருக்கு ஏற்பட்ட கொடூரம்... நால்வர் குழுவால் பயங்கரம் | Hyderabad Student Attacked Four Men Chicago

கடந்த வாரம் Ohio பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் 19 வயதேயான Shreyas Reddy Beniger என்ற மாணவர் சடலமாக மீட்கப்பட்டார். அந்த மாணவரும் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர். முதற்கட்ட விசாரணையில் மாணவர் Shreyas Reddy Beniger கொலையில் சந்தேகம் இருப்பதாக கருதவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அந்த வார தொடக்கத்தில், Purdue பல்கலைக்கழக மாணவர் நீல் ஆச்சார்யா சடலமாக மீட்கப்பட்டார். தமது மகன் மாயமானதாக அவரது தாயார் புகார் அளித்த சில மணி நேரங்களில் பல்கலைக்கழக வளாகத்திலேயே நீல் ஆச்சார்யா உடல் மீட்கப்பட்டது.

ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி, ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியாவில் கடந்த ஜனவரி 16ம் திகதி வீடற்ற ஒருவரால் சுத்தியலால் தாக்கிக் கொல்லப்பட்டார். அந்த நபருக்கு விவேக் சைனி அவ்வப்போது உணவும் தண்ணீரும் அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் இந்திய மாணவருக்கு ஏற்பட்ட கொடூரம்... நால்வர் குழுவால் பயங்கரம் | Hyderabad Student Attacked Four Men Chicago

ஆனால் சம்பவம் நடந்த 16ம் திகதி விவேக் சைனி அந்த நபருக்கு இலவசமாக உணவு தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் சுத்தியலால் 50 முறை விவேக் சைனியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US