அம்பானியிடம் கூட இல்லாத காரை வாங்கிய ஹைதராபாத் பெண்.., இவ்வளவு விலையா?
இந்திய கோடீஸ்வரர்களும், பிரபலங்களிடம் இல்லாத காரை ஹைதராபாத்தில் உள்ள பெண் ஒருவர் வாங்கியுள்ளார்.
Mukesh Ambani, Ratan Tata, Gautam Adani உள்ளிட்ட பெரும் பணக்காரர்களும், பிரபலங்களும் பல கார் கலெக்ஷன்களை வைத்துள்ளனர். இவர்கள், தங்கள் சொகுசு கார்களில் பயணம் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். ஆனால், அவர்கள் அதிகமாக எலக்ட்ரிக் கார்களை விரும்புவதில்லை.
ஹைதராபாத் பெண்
இந்திய மாநிலமான தெலங்கானா, ஹைதராபாத்தில் வசிக்கும் ஹர்ஷிகா ராவ் என்ற பெண் ஒருவர் பல பிரபலங்களிடம் இல்லாத காரை வாங்கியுள்ளார்.
அவர் இந்தியாவில் ரூ.2.55 கோடி (எக்ஸ்-ஷோரூம்) மதிப்புள்ள முதல் Lotus Eletre SUV காரை வாங்கியுள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு, பிரிட்டிஷ் பன்னாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களான Lotus குழுமம் luxury sports மற்றும் electric வாகனங்கள் வணிகத்தை கிக்ஸ்டார்ட் செய்தது. பின்னர் லோட்டஸ் Lotus Eletre SUV -யை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், நாட்டில் அதிக விலை மதிப்பு கொண்ட Eletre SUV -யின் முதல் உரிமையாளராக ஹர்ஷிகா ராவ் உள்ளார். லோட்டஸ் நிறுவனம் Eletre, Eletre S, and Eletre R என்ற மூன்று மாடல்களில் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதில், சிவப்பு நிற காரை ஹர்ஷிகா ராவ் வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை கார் கார்சி இந்தியா என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |