தென்னிந்தியாவை உலுக்கிய சம்பவத்தில் அதிரடி திருப்பம்: அடையாளம் காணப்பட்ட ஐவர்
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 17 வயது சிறுமி ஒருவர் காரில் கடத்தப்பட்டு கும்பல் ஒன்றால் சீரழிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஐவர் அடையாளம் காணப்பட்டு பொலிசாரால் கைதாகியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் சொகுசு காரில், 17 வயது சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு இலக்காகியுள்ளார். குறித்தச் சம்பவம் மே 28ம் திகதி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்புடைய சிறுமி தமது தோழி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள விடுதி ஒன்றில் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பிய அவர் பயம் கலந்த அதிரிச்சியில் இருந்துள்ளதாகவும், அவரது நிலை கண்டு சந்தேகமடைந்த பெற்றோர், அவரை தேற்றியதுடன், நடந்தவற்றை விசாரித்துள்ளனர்.
பின்னர் மே 31ம் திகதி காவல்துறையை நாடிய சிறுமியின் தந்தை, நடந்தவற்றை புகாராக அளித்துள்ளார். இதனையடுத்து ஜூபிலி ஹில்ஸ் பொலிசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணையை மேற்கொண்டனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும், தொடர்புடைய விடுதியில் இருந்து சிறுமியை ஐவர் கும்பல் அழைத்து செல்வது உள்ளிட்ட அனைத்து கண்காணிப்பு கெமரா காட்சிகளையும் விரிவாக ஆய்வு செய்து உறுதி செய்த பொலிசார், சிறுமி அடையாளம் காட்டியதன் அடிப்படையில் தற்போது ஐவரையும் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது கூட்டு பலாத்காரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.