473 கிமீ Range-உடன் Hyundai Creta EV அறிமுகம்., விலை என்ன?
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது பிரபலமான எஸ்யூவி Creta-வின் மின்சார பதிப்பை ஜனவரி 2-ஆம் திகதி இந்தியாவில் வெளியிட்டது.
தென் கொரிய கார் தயாரிப்பாளரான Creta வரவிருக்கும் இந்தியா மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல் இந்த மின்சார எஸ்யூவியை அறிமுகப்படுத்துகிறது.
Hyundai Creta EV 51.4kWh மற்றும் 42kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் வழங்கப்படும்.
இந்த மின்சார SUV நான்கு வகைகளைப் பெறும். இதில் Executive, Smart, Premium மற்றும் Excellence ஆகிய variants அடங்கும்.
இந்த கார் முழுவதுமாக சார்ஜே செய்யப்பட்டால் 473 கிமீ தூரம் ஓடும் என்றும், 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 7.9 வினாடிகளில் எட்டிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, level-2 ADAS உட்பட 70-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களைப் பெறும். இது நிறுவனத்தின் மலிவான EV-ஆக இருக்கும்.
இதன் ஆரம்ப விலை ரூ.20 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது Tata CURVE EV, Mahindra BE6, MG ZS EV மற்றும் வரவிருக்கும் Maruti e Vitara போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |