நீட் விடயத்தில் விஜய் கருத்துடன் உடன்படுகிறேன்: சீமான் பேச்சு
நீட் குறித்த கேள்விக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசிய கருத்துடன் உடன்படுகிறேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சீமான் பேசியது
மதுரையில் வைத்து தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பாமக ராமதாஸிற்கு எவ்வளவு வருத்தம் இருக்கிறது என்பது அவரது பேச்சில் தெரிகிறது.
ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பேசி தீர்க்கும் சூழ்நிலை இல்லாத காரணத்தால் அவர்கள் பொதுவெளியில் பேசுகின்றனர். ராமதாஸ் மனதில் இருந்ததை கொட்டி விட்டார். இது ஆறும் காயம்.
நீட் பயிற்சி என்னும் பெயரில் முதலாளிகள் பல கோடிகள் சம்பாதிக்கின்றனர். நீட் குறித்த கேள்விக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசிய கருத்துடன் உடன்படுகிறேன்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு மட்டுமே போராடுகிறது. மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |