நான் கிறிஸ்தவர் ஆனால்.., மகா கும்பமேளாவில் புனித நீராடிய பின்னர் மேரி கோம் பேட்டி
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் புனித நீராடினார்.
மேரி கோம் பேட்டி
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Special FD Scheme.., இந்த 3 திட்டங்களில் மார்ச் 31, 2025க்கு முன் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்!
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் கடந்த 13-ம் திகதி தொடங்கியது.
அந்தவகையில் இதுவரை சுமார் 8.81 கோடி பேர் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்த ஆண்டு மொத்தமாக 40 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பின்னர் அவர் பேசுகையில், "மகா கும்பமேளாவில் புனித நீராடியது நல்ல அனுபவம். இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர்.
Boxer Mary Kom ने महाकुंभ में लगाई डुबकी
— Kreately.in (@KreatelyMedia) January 26, 2025
घर वापसी पे घर वापसी हो रही है😀 pic.twitter.com/Di1cL3Ctw4
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இந்த நிகழ்வை உலகத்தரம் வாய்ந்த யாத்திரையாக மாற்றியுள்ளனர். நான் ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும், இந்த மகா கும்பமேளா நிகழ்வை ஆதரிக்க வந்துள்ளேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |