நான் ஒரு கிறிஸ்தவன்தான்... ஆனால்: கிறிஸ்துமஸ் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நீங்கள் என்னை முஸ்லிம் என நினைத்தால் நான் முஸ்லிம், என்னை இந்து என நினைத்தால் நான் இந்து என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
உதயநிதி பேச்சு
கிறிஸ்துமஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், "உலகமே கொண்டாடும் விழா என்றால் அது கிறிஸ்துமஸ் விழா தான். அதுவும் கிறிஸ்துமஸ் எனக்கு மகிழ்ச்சி.
நான் படித்தது டான் போஸ்கோ பள்ளியில், மேற்படிப்பு படித்தது லயோலா கல்லூரியில். நான் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பேசும்போது, "நானும் ஒரு கிறிஸ்தவன் என்பதை பெருமையாக சொல்கிறேன்" என்று கூறியிருந்தேன்.
அது பல பேருக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது. இப்போது மீண்டும் அதனை சொல்கிறேன். நான் ஒரு கிறிஸ்தவன் தான். அதனை சொல்வதில் மீண்டும் பெருமை கொள்கிறேன்.
நீங்கள் என்னை முஸ்லிம் என நினைத்தால் நான் முஸ்லிம், என்னை இந்து என நினைத்தால் நான் இந்து. எல்லோருக்கும் பொதுவானவன் நான். எல்லா மதங்களும் அன்பை தான் போதிக்கிறது.
அன்பு செலுத்த வேண்டும் என்று தான் மதங்கள் சொல்லி தருகிறது. மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் தான் வெறுப்பை ஏற்படுத்துவார்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |