டோனிக்கிட்ட கத்துக்கிட்ட வித்தையை டோனிக்கு எதிராகவே பயன்படுத்த போறேன்! ரிஷப் பண்ட் சொன்ன ரகசியம்
ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப் பாண்ட, இந்த தொடரில் டோனியிடம் இருந்து கற்ற சில வித்தைகளை சரியாக பயன்படுத்தி, கோப்பையை வென்று கொடுக்க தீவிரமாக முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 9-ஆம் திகதி நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளும், அதற்கு அடுத்தபடியாக 10-ஆம் திகதி சென்னை-டெல்லி அணியும் மோதவுள்ளன.
டெல்லி அணியின் தலைவரான ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக டெல்லி அணியின் புதிய தலைவராக ரிஷப் பாண்ட் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை அணிக்கெதிரான போட்டி குறித்து அவர் கூறுகையில், தன்னுடைய சொந்த அனுபவம் மற்றும் டோனியின் இருந்து தான் கற்றுக் கொண்ட வித்தைகளை, சென்னை அணிக்கு எதிராகவே பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
தன்னை தலைவராக தெரிவு செய்த பயிற்சியாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இதுவரை டெல்லி கேபிடல்ஸ் கோப்பையை வெல்லாத நிலையில் இந்த சீசனில் கோப்பையை வெற்றி கொள்ள தான் தீவிர முயற்சி மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்.
