நான் கீர்த்தி பாண்டியனோட Owner கிடையாது.. Partner மட்டுமே : கூலாக பதிலளித்த அசோக் செல்வன்
நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு நான் ஓனர் கிடையாது என்றும், அவருக்கு நான் பார்ட்னர் என்றும் நடிகர் அசோக் செல்வன் பதிலளித்துள்ளார்.
அசோக் செல்வன் பதில்
நடிகர் அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் காதலித்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், அசோக் செல்வன் நடித்த சபாநாயகன் திரைப்படம் நேற்று வெளியான நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, திருமணத்திற்கு பின்பு கீர்த்தி பாண்டியன் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருப்பது குறித்து அசோக் செல்வனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், "நான் கீர்த்தி பாண்டியனுக்கு ஓனர் கிடையாது. அவருக்கு நான் பார்ட்னர் மட்டுமே. அவர் நடிக்க கூடாது என்று சொல்வதற்கு எனக்கு உரிமை கிடையாது. அவர் தொடர்ந்து நடிப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை" என்று பதிலளித்தார்.
முன்னதாக கீர்த்தி கூறியது..
முன்னதாக, கண்ணகி பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி பாண்டியனிடம் திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "நடிப்பும் ஒரு தொழில் தான். திருமணத்திற்கு பின்பு அதை செய்யக்கூடாதா?
இந்த கேள்வியை அசோக் செல்வனிடம் கேட்க முடியுமா? ஆண்கள் திருமணத்திற்கு பின்பு நடிக்கலாம். பெண்கள் மட்டும் ஏன் அதை செய்யக்கூடாதா?" என்று பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |