நான்தான் காணாமல்போன பிரித்தானியச் சிறுமி... ஆதாரம் இருப்பதாகக் கூறும் ஜேர்மன் இளம்பெண்
ஜேர்மன் இளம்பெண் ஒருவர், தான் காணாமல்போன பிரித்தானியச் சிறுமி மேட்லினாக இருக்கக்கூடும் என்றும், தன்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் மாயமான பிரித்தானியச் சிறுமி
ஜேர்மனியில் வாழும், @shellmc22 என்ற பெயரில் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடும் இளம்பெண் ஒருவர், தான் காணாமல்போன மேட்லின் மெக்கேன் (Madeleine McCann) என்னும் பிரித்தானியச் சிறுமியாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகளான மேட்லின் என்ற மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் Kate மற்றும் Gerry McCann என்னும் பிரித்தானியத் தம்பதியர்.
ஜேர்மன் சிறையிலிருக்கும் Christian Brueckner என்னும் நபர் மேட்லினை கடத்தி கொலை செய்ததாக பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், இதுவரை மேட்லினுடைய உடல் கிடைக்கவில்லை, Bruecknerம் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
டி என் ஏ பரிசோதனை கோரும் ஜேர்மன் இளம்பெண்
இந்நிலையில், ஜேர்மனியில் வாழும் ஒரு 21 வயது இளம்பெண், தான் காணாமல்போன பிரித்தானியச் சிறுமி மேட்லினாக இருக்கக்கூடும் என்றும், தன்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தன் காலிலுள்ள ஒரு அடையாளமும், தன் கண்ணிலிருக்கும் ஒரு புள்ளியும், தான் மேட்லினாக இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் என்கிறார் அவர்.
Image: PA
தான் மேட்லினிடைய பெற்றோரான Kate மற்றும் Gerry McCann ஆகியோருடன் பேச விரும்புவதாகத் தெரிவித்துள்ள அந்த பெண், தான் டி என் ஏ பரிசோதனை செய்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னெவென்றால், 2007இல் காணாமல்போன மேட்லின் உயிருடன் இருந்தால், அவருக்கு இப்போது 17 வயதுதான் ஆகியிருக்கும். தன்னை மேட்லின் என கூறிக்கொள்ளும் அந்த ஜேர்மன் இளம்பெண்ணுக்கோ இப்போது 21 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
image: TikTok/ @shellmc22