இந்தியாவால் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியும்: பிரான்ஸ் ஜனாதிபதி நம்பிக்கை
இந்தியாவால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியும் என பிரான்ஸ் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியும்
ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என தான் உறுதியாக நம்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
2036இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா ஆர்வம் காட்டிவருகிறது. அத்துடன், எகிப்து முதலான பல நாடுகள், 2036இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில்தான், ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என தான் உறுதியாக நம்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த மேக்ரான், உங்கள் நாட்டின் மீது எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளதுடன், உங்களால் ஒலிம்பிக் போன்ற நிகழ்ச்சிகளை திறம்பட நடத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக் போட்டிகள் தொடர்புடைய தொழில்நுட்பக் குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்புமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும், எங்கள் ஒலிம்பிக் ஆயத்தக் குழுவிலும் சில இந்தியர்கள் இருக்கிறார்கள் என்றும், எங்களால் இந்தியாவுக்கு உதவமுடியுமானால் அதனால் எங்களுக்கும் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார் மேக்ரான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |