எனக்கு இந்த பதவியே வேண்டாம்... கோபத்தில் பதவியை ராஜினாமா செய்த நீதிபதி: பின்னணியில் உள்ள சம்பவம்
பிரான்சில் பெண் ஒருவரை அவரது வீட்டின் மாடியிலிருந்து அடித்து தூக்கி வீசினார் ஒருவர். ஆனால், அவரை விசாரணைக்கு நிறுத்தமுடியாது என்று கூறிவிட்டது பிரான்ஸ் உச்ச நீதிமன்றம்.
இதை எதிர்த்து தனது பதவியையே ராஜினாமா செய்துள்ளார் நீதிபதி ஒருவர். நடந்தது என்னவென்றால், பாரீஸிலுள்ள அடுக்குமடிக் குடியிருப்பில் வாழ்ந்துவந்த Sarah Halimi (65) என்ற பெண்மணியை Kobili Traoré (32) என்பவர், அந்த பெண்ணின் வீட்டிலேயே வைத்து அடித்துத் துவைத்து பால்கனியிலிருந்து தூக்கி வீசிவிட்டார்.
அந்த பெண்மணி பரிதாபமாக பலியாகிவிட்டார். அவரைத் தூக்கி வீசிய Kobili ஒரு இஸ்லாமியர், அவர் அந்த பெண்ணைத் தூக்கி வீசும்போது ‘அல்லாஹூ அக்பர்’ என சத்தமிட்டதை அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்தவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
இவ்வளவு சாட்சிகள் இருந்தும், சம்பவம் நடக்கும்போது Kobili கஞ்சா அருந்தியிருந்ததால், அவர் சுயநினைவில் இல்லை என்றும், அதனால், அவரை விசாரணைக்குட்படுத்த முடியாது என்றும் பிரான்ஸ் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
வரலாற்று ஆசிரியர் சாமுவேல் இஸ்லாமிய தீவிரவாதி ஒருவனால் கொல்லப்பட்டதிலிருந்தே பிரான்ஸ் மக்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் ஒரு இஸ்லாமியர் ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டு தண்டனையிலிருந்து தப்பியுள்ளதால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளார்கள்.
பிரான்சில் மட்டுமின்றி, லண்டன், டெல் அவிவ், லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி மற்றும் நியூயார்க்கிலும் இந்த தீர்ப்பை எதிர்த்து போராட்டங்கள் துவங்கியுள்ளன.
இதில் இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், கொல்லப்பட்ட Sarah Halimi ஒரு யூதப் பெண்மணி. ஆகவே, பிரெஞ்சு யூதரான Jack Broda என்னும் நீதிபதியும், உச்ச நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய இந்த முடிவை எதிர்த்து தனது நீதிபதி பதவியையே ராஜினாமா செய்துள்ளார்.