பிரண்ட்ஸ் கூட விளையாடனும்.. டியூசன் போக பிடிக்கல.. 6 -ம் வகுப்பு மாணவி எடுத்த முடிவு
இந்திய மாநிலம், தெலுங்கானாவில் டியூசன் போக பிடிக்கவில்லை என்று மனமுடைந்த 6 ஆம் வகுப்பு மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டியூசன் போக பிடிக்கல
ஹைதராபாத்தின் நல்லகண்டலா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, தனது பெற்றோருடன் 12 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இவர், தெல்லாப்பூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6 -ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த மாணவி, அண்மையில் நடந்த தேர்வுகளில் கணிதப் பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், அவரது பெற்றோர் டியூஷனில் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
இதனால், தங்களது அடுக்குமாடி குடியிருப்பிலேயே கணித பாடத்திற்கான சிறப்பு வகுப்பில் மாணவியை சேர்த்து விட்டுள்ளனர். அங்கு, பள்ளி முடிந்ததும் மாலை 1 மணி நேரம் டியூசன் சென்றுள்ளார்.
அப்போது, தனது நண்பர்களுடன் விளையாடுவதற்கு நேரம் இல்லாததால் டியூசன் போக பிடிக்கவில்லை என்று பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார்.
15 -வது மாடியில் இருந்து குதித்த சிறுமி
இதனை பொருட்படுத்தாத சிறுமியின் பெற்றோர், கட்டாயப்படுத்தி டியூசன் அனுப்பி வைத்துள்ளனர். அதே போல, நேற்று மாலையும் டியூசன் போக பிடிக்கவில்லை என்று அடம்பிடித்துள்ளார்.
istock
ஆனால், கட்டாயம் போகவேண்டுமென்று பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்து வெளியில் சென்ற சிறுமி, டியூசனுக்கு செல்லாமல் பால்கனி பக்கம் சென்று ஜன்னலை திறந்து 15 -வது மாடியில் கீழே குதித்துள்ளார். இதனால், உடல் சிதறி சிறுமி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து, சிறுமி மன அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுத்திருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |