இவரால் நான் பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துள்ளேன்! அவ்ளோ பயம்: இலங்கை அணி ஜாம்பவான் சங்ககாரா ஓபன் டாக்
இலங்கை அணியின் முன்னாள் வீரரான சங்ககாரா, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளேவின் பந்து வீச்சை நினைத்து பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துள்ளதாக கூறியுள்ளார்.
உலகமே இப்போது ஊரடங்கு என்ற போர்வைக்குள் இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பல போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரும் ஒன்று, இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் சந்திது தூக்கத்தை தொலைத்த பந்து வீச்சாளர் குறித்து கூறியுள்ளார்.
அதில், நான் பார்த்து பயந்த பந்து வீச்சாளர்களில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்ளேவும் ஒருவர். இவரது பந்து வீச்சிற்கு அஞ்சி நான் பல இரவுகள் தூக்கத்தைத் தொலைத்துள்ளேன்.
கும்ப்ளே ஒரு சாதாரணமான ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர் கிடையாது. அவரது பந்து வீச்சில் இருக்கும் ஹை ஆர்ம் ஆக்ஷன் மற்றும் வேரியேஷன்கள் ஆகியவைகள் மிக சிறப்பாக இருக்கும்.
அவருடைய பந்து வீச்சில் வேகமும், லைன் எப்பொழுதும் மிகச் சரியாக இருப்பதால் அவ்வளவு எளிதில் அவரது பந்துவீச்சு ரன்களை எடுக்க முடியாது.
அவரது பந்துவீச்சில் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் அவரது பந்து வீச்சில் விளையாட கஷ்டப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.