மைதானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு சரிந்த கால்பந்து வீரர் எப்படி இருக்கிறார்! அவரே வெளியிட்ட புகைப்படம்
யூரோ 2020 கால்பந்து தொடரில் பின்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தில் சரிந்த டென்மார்க் வீரர் மருத்துவமனை படுக்கையில் இருந்த படி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 12ம் திகதி Parken மைதானத்தில் நடந்த போட்டியில் குரூப் பி-யில் உள்ள டென்மார்க்-பின்லாந்து அணிகள் மோதின.
போட்டியின் முதல் பாதி முடிவுதற்கு முன் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் சரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து போட்டி நிறுத்தப்பட்டு, எரிக்சன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின் தொடர்ந்து நடந்த போட்டியில் 1-0 என் கோல் கணக்கில் பின்லாந்து டென்மார்க்கை வீழ்த்தியது.
பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எரிக்சன் சுயநினைவுடன் இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் கிறிஸ்டியன் எரிக்சன் மருத்துவமனையில் தான் நலமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாவது, மருத்துவமனையில் நான் தற்போது நன்றாக இருக்கிறேன் என மருத்துவமனை படிக்கையில் இருந்த படி தன் கட்ட விரலை உயர்த்தி காட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
உலகெங்கிலும் இருந்து தொடர்ந்து வரும் வாழ்த்துகளுக்கும் நலன் விசாரிப்பு செய்திகளுக்கும் நன்றி.
இந்த அன்பு எனக்கும், என் குடும்பத்திற்கும் மிகப் பெரியது, நான் நன்றாக இருக்கிறேன்.
எனக்கு இன்னும் மருத்துவமனையில் சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்றாலும் நான் நலமாகவே இருக்கிறேன்.