நான் இந்த கொரோனா தடுப்பூசி தான் போட்டுக் கொண்டேன்! பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அறிவிப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தான் போட்டுக் கொண்ட தடுப்பூசி தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். இப்போது வரை அங்கு கொரோனா பரவல் தீவிரம் உள்ளது.
இதனால் தடுப்பூசியின் அவசியத்தை மக்களுக்கு வெளிப்படுத்தி, அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், தான் என்ன தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என்பது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளார்.
ஏனெனில், அவர் மக்களிடம் தடுப்பூசி தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு சமூகவலைத்தளம் மூலம் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் இன்று அவரிடம், நீங்கள் என்ன தடுப்பூசி போட்டுக்கொண்டீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், உங்களில் பலர் போல் நனும் Pfizer தடுப்பூசி போட்டுக்கொண்டேன். கடந்த மே மாதம் 31 ஆம் திகதி இந்த தடுப்பூசியினை போட்டுக்கொண்டேன் என்று பதிலளித்தார்.
மேலும், நேற்றைய தினம்(ஆகஸ்ட் 3-ஆம் திகதி), தடுப்பூசி போட்ட பின்பு உங்களுக்கு பக்க விளைவுகள் ஏதேனும் இருந்ததா? என்ற கேள்விக்கு, அவர் எனக்கு எந்த ஒரு பக்கவிளைவுகளும் இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.