ஆண்டவனே என் பக்கம் இருக்கான்: டொனால்ட் டிரம்ப்
கடவுளே தன் பக்கம் இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கூறியுள்ளார்.
குதுயரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மில்வாக்கியில் (Milwaukee) நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசினார்.
அப்போது, தன் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, முதல் முறையாக பகிரங்கமாக பேசினார்.
ரத்தம் சிந்தினாலும், கடவுள் தன் பக்கம் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடைசி நேரத்தில் தலையைத் திருப்பாமல் இருந்திருந்தால், தோட்டா இலக்கைத் தாக்கியிருக்கும் என்றும், இன்று உங்களுடன் இருக்க முடியாது, கடவுள் அருளால் உங்கள் முன் நிற்கிறேன் என டிரம்ப் கூறினார்.
குடியரசுக் கட்சி மாநாடு குடும்ப விழாவாக மாறியுள்ளது. நான்கு நாள் கூட்டத்தில் ட்ரம்ப் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். டிரம்பின் குடும்ப உறுப்பினர்கள் விஐபி பெட்டியில் காணப்பட்டனர்.
இதன்மூலம் தான் ஒரு குடும்பஸ்தர் என்ற அடையாளத்தைக் கொடுத்தார். அவரது உரையின் போது, அவர் தனது மனைவி மெலானியா மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
I Had God On My Side, Trump, Donald Trump