இந்தியாவிடம் நான் நினைத்தை செய்துவிட்டேன்! வெற்றிக்கு பின் பேசிய பாகிஸ்தான் இளம் வீரர்
பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜீசன் ஜமீர், இந்திய அணிக்கெதிரான போட்டியில் தான் நினைத்ததை செய்துவிட்டதாக பெருமையுடன் கூறியுள்ளார்.
19 வயதிற்குட்பட்டோருக்கான 50 ஓவர் போட்டிகள் கொண்ட ஆசிய கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 23-ஆம் திகதி முதல் துவங்கியது.
இதில், நேற்று(25.12.2021) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இப்போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கை, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான Zeeshan Zameer நிலைகுலைய செய்தார். 10 ஓவர்கள் வீசிய அவர் 60 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அதன் பின் பேசிய அவர், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் நான் 5 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். அது நடந்துவிட்டது, நான் அல்லாவிற்கு தான் நன்றி கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.