என் வாழ்நாளில் நான் மதுவை தொட்டதே இல்லை.., குடித்ததாக கூறிய குற்றச்சாட்டுக்கு குஷ்பு பதில்
நடிகை குஷ்பு குடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு நான் என் வாழ்நாளில் மதுவை தொட்டதே இல்லை என்று அவர் பதில் அளித்துள்ளார்.
குஷ்பு ஆய்வு
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் இறந்தது தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு குஷ்பு உள்ளிட்டோர் சென்று பொலிஸாரிடம் கேள்விகளை கேட்டனர்.
அப்போது குஷ்பு பேசுகையில், "அந்த பெண்ணிற்கு 20 வயது தான் ஆகிறது. அவரது கணவர் இறந்துவிட்டார். இன்னொரு பெண்ணான 6 மாத கர்ப்பிணியின் கணவரும் இறந்துவிட்டார்.கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் தினக்கூலி தொழிலாளர்கள்.
ரூ.3.3 லட்சம் சம்பளம்., ரூ.100 கோடி மதிப்பில் பங்களா: எதிர்க்கட்சி தலைவர் பதவியால் ராகுலுக்கு கிடைக்கும் வசதிகள்
இப்போது அவர்கள் இல்லாததால் அவர்களது குடும்பம் நிற்கதியாய் நிற்கிறது. தினக்கூலி வேலை செய்யும் 130 பேருக்கு கள்ளச்சாராயம் எளிதாக கிடைக்கிறது என்றால், பொலிஸுக்கு தெரியாமல் எப்படி? உங்களுக்கு தெரியாதுன்னு சொல்றீங்க, என்ன லாஜிக் இருக்கிறது" என்று கேள்விகளை அடுக்கினார்.
குஷ்பு பதிலடி
இந்நிலையில் சமூக ஆர்வலரும், பாஜகவை விமர்சித்து வரும் ஸ்ரீவித்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "Black wine குடிக்கும் குஷ்புவுக்கு தான் இதனை விசாரிக்கும் முழு தகுதியும் உண்டு. நீங்க விசாரிங்க மேடம்" என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த நடிகை குஷ்பு, "அக்கா நீங்க ஊற்றி கொடுத்தீர்களா ? நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பதால், உங்கள் முதலாளியை மகிழ்விக்க நீங்கள் எவ்வளவு அவநம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் என்பதை இது காட்டுகிறது.
ஒருவேளை நீங்கள் இந்த கலாச்சாரத்திற்கு ஆளான சூழலில் வளர்ந்திருக்கலாம். என் வாழ்நாளில் நான் மதுவைத் தொட்டதில்லை என்பது உலகுக்குத் தெரியும். உங்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்வேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |