தான் தற்செயலாக கிரிக்கெட் வீரர் ஆனேன்! அந்த உணர்வை விவரிக்க முடியாது... தமிழன் அஸ்வின் சிலாகிப்பு
தான் தற்செயலாக கிரிக்கெட் வீரர் ஆனேன் என தமிழக வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவரான ரவிச்சந்திரன் அஸ்வின், சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையை படைத்தார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், நான் தற்செயலாக ஒரு கிரிக்கெட் வீரர் ஆனேன். நான் உண்மையில் ஒரு கிரிக்கெட் காதலன். நான் இங்கே என் கனவை வாழ்கிறேன், நான் ஒரு நாள் இந்திய ஜெர்சியை அணிவேன், விளையாடுவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை
நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்கள் எடுத்த போது ஒட்டுமொத்த மைதானத்தில் இருந்தவர்களும் எழுந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். அந்த உணர்வை விவரிக்க முடியாது. கடந்த 3 மாதகாலமும் ஒரு கனவை போல் உள்ளது என கூறியுள்ளார்.