31 வயதில் 11 குழந்தைகள்... மீண்டும் கர்ப்பம்: இளம் தாய் பகிர்ந்த அனுபவங்கள்
அமெரிக்காவைச் சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 31 வயதில் 12 குழந்தைகளை பெற்றெடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
அமெரிக்காவின் Kansas-ல் உள்ள Arkansas நகரைச் சேர்ந்தவர் Britni Church. தற்போது 31 வயதாகும் இவருக்கு 12 குழந்தைகள் உள்ளனர். இவரை சமூகவலைத்தளங்களில் ஏராளமானோர் பின்பற்றி வருகின்றனர்.
குறிப்பாக டிக் டாக்கில் இவர்களுடையே குடும்பத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்தளவிற்கு பிரபலமான இவர் டிக் டாக்கில் இணையவாசிகள் பலர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதில், இத்தனை குழந்தைகள் இருப்பதால் உங்களுக்கு வெறுக்கவே இல்லையா? என்று கேட்க, உடனே 12 குழந்தைகளுக்கு தயாக எனக்கும் இந்த கேள்வி நிறைய உள்ளது. இருப்பினும், அவர்கள் விரும்பாத எதையும் நான் செய்ய வைப்பதில்லை, அதனால் எனக்கு எதுவும் தற்போது வரை தெரியவில்லை.
Credit: titktok
இருப்பினும் ஒரு சில நேரங்களில் அவர்களுக்குள் சண்டை வரும் போது என்று மற்றொரு இணையவாசி கேட்க, அதற்கு ஆம் என்று கூறிய அவர், ஒரு அடைகாக்கும் தாயாக நான் அவர்களை கவனித்து வருவதாகவும், என்னுடைய மூத்த பிள்ளைகள் இது போன்ற நேரத்தில் உதவியாக இருப்பார்கள் என்று கூறினார்.
மேலும், Britni Church குடும்பத்திற்காக வாரத்திற்கு மட்டும் 230 பவுண்ட் மதிப்பு கொண்ட மளிகைப் பொருட்கள் வாங்குவதாகவும், அதே போன்று ஐந்து பெட்டி தானியங்கள், 66 அட்டை பெட்டிகள் அடங்கிய பால், 600 நாப்கின்கள் போன்றவை முக்கியமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
Credit: instagram
தன்னுடைய 16 வயதில் முதல் குழந்தை பெற்றெடுத்த Britni Church, அவருக்கு Crizman(15) என்று பெயர் வைத்தார். அதன் பின் இவருக்கு Jordan(14), Caleb(13), Jace(12) மற்றும் Cadence(10) என அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் பிறந்தன.
Credit: instagram
அதன் பின் கணவரை விவாகரத்து செய்து கொண்ட இவர் எதிர்பாரதவிதமாக 2012-ஆம் ஆண்டு தன்னுடைய ஆறாவது குழந்தையான Jesalyn(8)-ஐ பெற்றெடுத்தார்.
இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு Chris என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்ட இவர், இவர் மூலம் 5 குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது இந்த ஜோடி ஆறாவது(கர்ப்பமாக இருக்கிறார்) குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.