நான் தோல்வியடைந்த கேப்டன்! இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி வருத்தம்
Thiru
in கிரிக்கெட்Report this article
நான் தோல்வியடைந்த கேப்டனாகவே கருதப்பட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கேப்டன் விராட் கோலி
இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்த போது அணியை சர்வதேச அளவில் முக்கிய இடத்திற்கு நகர்த்தினார்.
அதிலும் குறிப்பாக 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தி உள்ள விராட் கோலி, 24 உள்நாட்டு வெற்றிகளையும், 15 வெளிநாட்டு வெற்றிகளையும், குவித்துள்ளார். அதே சமயம் வெறும் 16 தோல்விகளை மட்டும் விராட் கோலி எதிர்கொண்டுள்ளார்.
ESPNcricinfo Ltd
உலக கோப்பை தொடர்களில் தோல்விகளை விராட் கோலி சந்தித்த பிறகு, எழுந்த அழுத்தத்தின் காரணமாக 2022ம் ஆண்டு இறுதியாக விராட் கோலி தனது கேப்டன்சி பொறுப்பில் இருந்து முழுவதுமாக வெளியேறினார்.
தோல்வியடைந்த கேப்டன்
இந்நிலையில் “நான் தோல்வி அடைந்த கேப்டனாக கருதப்பட்டேன்” என விராட் கோலி தெரிவித்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. RCB-யின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி இதனை தெரிவித்துள்ளார்.
அதில், நான் கேப்டனாக இருந்த போது, 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப் போட்டி, 2019ம் ஆண்டில் உலக கோப்பையில் அரையிறுதி போட்டி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என முன்னேறி இருந்தோம்.
ஆனாலும் நானும் தோல்வியடைந்த கேப்டனாகவே கருதப்பட்டேன் என விராட் கோலி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் இந்த வருத்தமான கருத்தை கேட்டு அவரது ரசிகர்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர், அத்துடன் தங்களின் All time சிறந்த கேப்டன் நீங்கள் தான் என்று தெரிவித்து வருகின்றனர்.