கொரோனா தடுப்பூசி இன்று போட்டுக் கொண்டேன்! ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட முக்கிய பதிவு
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வந்து இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பத்தில் அதிக அளவில் இருந்ததால், முதலில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட கூடியவர்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
அதன் பின் படிப்படியாக அடுத்தடுத்த கட்டத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரான்சில், வரும் திங்கட் கிழமை முதல், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனத் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பிரான்ஸ் மக்கள் தங்கள் அருகில் இருக்கும் தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.
Vacciné !
— Emmanuel Macron (@EmmanuelMacron) May 31, 2021
இந்நிலையில், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் மற்றும் தன்னுடைய மனைவி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோம்.
எங்களையும், எங்கள் உறவுகளையும், சுற்றங்களையும் பாதுகாக்க, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Comme Brigitte et moi, comme 25 millions de Français déjà, vaccinons-nous ! Pour nous protéger, pour protéger nos proches. Prenez rendez-vous sur https://t.co/tWTeKkRasd. https://t.co/S5ATCvssiS
— Emmanuel Macron (@EmmanuelMacron) May 31, 2021
கொரோனத் தொற்று ஏற்பட்டு ஐந்து மாதங்கள் ஆன நிலையில், தற்போது மேக்ரான் மற்றும் அவரது மனைவி இருவரும் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.