‘நான் பாகிஸ்தானுக்கு செல்கிறேன்’... யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் ட்விட்
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து முடிவை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன், யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் பதிவிட்ட ட்விட் ரசிகர்கள் மட்டுமன்றி பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம்காட்டி நியூசிலாந்தை தொடரை ரத்து செய்துள்ள நிலையில், நாளை (ஞயிற்றுக்கிழமை) பாகிஸ்தான் செல்லவுள்ளதாக கெய்ல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நான் நாளைக்கு பாகிஸ்தான் செல்கிறேன், யார் என்னுடன் வர தயார்? என கெய்ல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
I’m going to Pakistan tomorrow, who coming with me? 😉🙌🏿
— Chris Gayle (@henrygayle) September 18, 2021
ஆனால், மீண்டும் தொடங்கவிருக்கும் ஐபிஎல் 2021 தொடரில் விளையாட, தற்போது கெய்ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் பஞ்சாப் அணியுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், கெய்லின் ட்விட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரீடுவிட்டை செய்துள்ளது.
see u there legend 😁😁😁😁
— Mohammad Amir (@iamamirofficial) September 18, 2021
அதுமட்டுமின்றி, பாகிஸ்தானில் சந்திக்கலாம் ஜாம்பவான் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் கெய்ல் ட்விட்டுக்கு கமெண்ட் செய்துள்ளார்.
கெய்லின் ட்விட்டை 1,11,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர், 24,000-க்கு மேற்பட்டோர் ரீடுவிட் செய்துள்ளனர்.