ஹார்திக் பாண்ட்யாவை அன்றே எச்சரித்தேன்! பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் ஓபன் டாக்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர், ஹார்தி பாண்ட்யாவை கடந்த 2018-ஆம் ஆண்டே எச்சரித்தேன் என்று கூறியுள்ளார்.
இந்திய அணியில் அசைக்க முடியாத ஆல் ரவுண்டராக இருந்தவர் தான் ஹார்திக் பாண்ட்யா. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஹார்திக் பாண்ட்யாவின் ஆட்டம் அந்தளவிற்கு இல்லை.
குறிப்பாக, டி20 உலகக்கோப்பை தொடரில் ஹார்திக் பாண்ட்யாவின் ஆட்டம் பெரிய அளவில் இல்லாத காரணத்தினால்அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது.
இதன் காரணமாகவே அவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து தொடர் மற்றும் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்கா தொடரிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கு எல்லாம், முக்கிய காரணம், ஹார்திக் பாண்ட்யா முன்பு தன்னுடைய காயங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் விளைவே இது என்று கூறப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர், நான் கடந்த 2018-ஆம் ஆண்டு ஹார்திக் மற்று பும்ரா இருவரையும் சந்தித்து சில யோசனைகள் கூறினேன்.
குறிப்பாக இருவரும் ஒல்லியாக இருப்பதால், காயம் அடைய அதிக வாய்ப்புள்ளது, எச்சரிக்கையுடன் இருக்கும் படி கூறினேன். அது கூறிய சில நாட்களிலே ஹார்திக்கிற்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டது.
ஏன் நான் இதை கூறுகிறேன் என்றால், தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இன்று வரை விளையாட முடியாத நிலையில் மிகவும் கஷ்டப்படுவதாக கூறினார்.