iMac Pro புதிய டிசைன் இப்படி தான் இருக்கும்? புகைப்படங்களுடன் கசிந்த சிறப்பம்சங்கள்
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஐமேக் ப்ரோ டிசைன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் மற்றும் இன்னபிற விவரங்கள் கசிந்துள்ளது.
தனது கணினி மொடல்கள் ஒவ்வொன்றையும் அப்டேட் செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஐமேக் ப்ரோ வெளியீடு இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது.
அதன்படி மேலும் 27 இன்ச் ஐமேக் ப்ரோ மொடலில் டிசைன் பார்க்க எம்1 சிப்செட் கொண்டிருக்கும் 24 இன்ச் ஐமேக் மாடலை போன்றே காட்சியளிக்கும் என அவவர் தெரிவித்தார்.
ஆப்பிள் ஐமேக் புதிய மேம்பட்ட ஐமேக் ப்ரோ மாடலில் மினி எல்.இ.டி. பேக்லைட்டிங் மர்றும் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐமேக் ப்ரோ ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்களை கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதே பிராசஸரகள் 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மொடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிதாக ஐமேக் ப்ரோ வெளியிடுவது பற்றி வழக்கம் போல் ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
எனினும், புதிய சாதனங்கள் இந்த ஆண்டு துவக்கத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இவை ஸ்ப்ரிங் நிகழ்வில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.