பிரித்தானியாவில் ஆப்பிள் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
பிரித்தானியாவில், பல்பொருள் அங்காடி ஒன்றில் ஆப்பிள் பழங்கள் ஆர்டர் செய்தார் ஒருவர். Twickenham என்ற இடத்திலுள்ள டெஸ்கோ பல்பொருள் அங்காடியில் ஆப்பிள் பழங்கள் ஆர்டர் செய்தார் நிக் ஜேம்ஸ் (50) என்பவர்.
ஆப்பிள் பழங்களை வாங்கச் சென்ற ஜேம்ஸிடம், அவரது பையில் அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்கள் அங்காடி ஊழியர்கள். ஏதோ ஒரு இனிப்பு இருக்கலாம் என்று எண்ணி பையை பார்த்திருக்கிறார் ஜேம்ஸ்.
அந்த பைக்குள் இருந்தது, ஒரு ஆப்பிள் ஐபோன்! என்ன, ஆப்பிள் ஆர்டர் செய்த எனக்கு ஆப்பிள் ஐபோனா என ஆச்சரியத்தில் திகைத்துப்போயிருக்கிறார் ஜேம்ஸ்.
விடயம் என்னவென்றால், டெஸ்கோ மொபைல் நிறுவனம், ஏப்ரல் 18 வரை தங்களிடம் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸாக விலையுயர்ந்த பரிசுப்பொருட்களை வழங்கிவருகிறது.
அந்த வகையில், அதிர்ஷ்டசாலியான ஜேம்ஸ், ஆப்பிள் பழங்கள் ஆர்டர் செய்ய, ஆப்பிள் ஐபோனுடன் வீடு திரும்பியுள்ளார்!