முழு பொறுப்பையும் நான் ஏற்று கொள்கிறேன்.. தொடர் தோல்விக்கு பின் ரோகித் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு பின் அணித்தலைவர் ரோகித் சர்மா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் படுமோசமான தோல்விகளை தழுவி வருகிறது. நேற்றைய போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6வது தோல்வியை சந்தித்தது.
இதனால் மும்பை அணி ரசிகர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர். இந்த நிலையில் தோல்விக்கு பின்னர் பேசிய மும்பை அணித்தலைவர் ரோகித் சர்மா, 'மும்பை அணியை இப்படி இக்கட்டான நிலைக்கு இருப்பதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்று கொள்கிறேன்.
ஒவ்வொரு ஆட்டத்தையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு, கடந்த காலத்தில் எப்படி இருந்தேனோ அதே மாதிரி இனி வரும் போட்டிகளை அணுகுவேன். மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி முயற்சி செய்வோம்' என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் சீசன் தொடக்கத்தில் முதல் முறையாக தொடர்ந்து 6 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது.